சீமானுக்கு பின் யார் தலைவர்? அந்த போட்டிதான் இதற்கு காரணமே.. சீமான் ஆவேசம்
கட்சி உறுப்பினர்கள் விலகுவது குறித்து சீமான் பேசியுள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
அதில் கலந்துக்கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், இந்தியா வளர்ந்த நாடா? இன்னும் மக்கள் பசி பட்டினியுடன் உள்ளனர். ஆங்கிலம் படிப்பது தான் அறிவு என பொதுப்புத்தி உருவாகி உள்ளது. இந்தி படித்தால் அடுத்த கட்ட வளர்ச்சி என்றால் வட மாநிலத்தில் இருந்து ஒன்றரை கோடி மக்கள் ஏன் தமிழகத்திற்கு வேலைக்காக வருகிறார்கள்?
இலங்கை, பங்களாதேஷில் நடந்தது இந்தியாவில் நடக்கும். திராவிடன் அரியணையில் உட்கார வைக்க வட இந்தியர் தான் தேவைப்படுகிறார். தேர்தல் வியூகங்களுக்கு வட இந்தியர்களுக்கு பதிலாக இங்குள்ள ஹெச்.ராஜா, ரங்கராஜ் பாண்டேவை பயன்படுத்தலாமே?
உறுப்பினர்கள் விலகல்
நான் நோட்டுக்காக, சீட்டுக்காக அரசியலுக்கு வரவில்லை, நம் நாட்டுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். தன்னை முன் நிறுத்தி கொள்பவர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி செல்கிறார்கள், நாம் தமிழர் கட்சியில் கட்சிக்காக நான், எனக்காக கட்சி என செயல்பட வேண்டும்.
சீமானுக்கு பின் யார் தலைவர் எனும் போட்டியால் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். நேர்மையாக கட்சி நடத்த சர்வாதிகாரியாக செயல்படுவேன். திராவிடம் பேசாமல் பெரியார் குறித்து பேசாமல் நான் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்துள்ளேன்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்த போதே நான் செல்லவில்லை, ஆகவே தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது” எனத் தெரிவித்துள்ளார்.