அது பரம ரகசியம்; அதை கேட்கவே கூடாது சொல்லிட்டேன் - ஓபிஎஸ்
அதிமுக தொண்டர்கள் தன்னிடம் பேசுவது ரகசியம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்
கேரளா, மூணாறில் சுற்றுலா பேருந்து விபத்திற்குள்ளாகி காயமடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏழு கல்லூரி மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து உடல்நலன் குறித்து கேட்டறிந்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மக்கள் பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கையால் தான் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.
வெற்றிக்கான ரகசியம்
ஓபிஎஸ் பதவிக்காக எந்த இலக்கும் செல்லக்கூடியவர் என தன்னிடம் ஜெயலலிதா கூறியதாக ஆர்.பி.உதயகுமார் கூறுகிறார். ஆர்பி உதயகுமாரிடம் ஜெயலலிதா பேசவில்லை.
வெற்றிக்கான ரகசியம் உள்ளது, அதிமுகவில் இருப்பவர்கள் தொலைபேசியில் பேசுவது ரகசியம் என ஏற்கனவே கூறிவிட்டேன். அதை தற்போது கூற முடியாது. அது பரம ரகசியம்னு சொல்லிட்டேன், அதை கேட்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.