அடேங்கப்பா.. AI-க்கு புது விளக்கம் கொடுத்த பிரதமர் மோடி- இது தெரியாம போச்சே!
அமெரிக்காவை விட 5ஜி இணையச் சேவை சந்தை இந்தியாவில் பெரிய அளவில் உள்ளது.
பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அந்த வகையில் நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு இரவு விருந்தில் கலந்து கொண்டார்.
இதனையடுத்து இன்று க்வாட் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளப் பிரதமர் மோடி நியூயார்க் சென்றார். அங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர்,'' நான் எப்போதும் நாட்டில் உள்ள இந்திய மக்களுக்காகவும் , புலம்பெயர்ந்த இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டுள்ளேன். மேலும் அவர்களது திறன்களைப் புரிந்துகொண்டிருக்கிறேன்.
நான் எந்தவித பதிவிலும் இல்லாத காலத்திலும் அதைப் புரிந்துகொண்டேன். என்னைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரும் இந்தியாவின் வலிமையான பிராண்ட் தூதர்களாக இருந்தீர்கள். அதனால்தான் நான் உங்களை 'ராஷ்டிரதூத்' என்று அழைக்கிறேன் என்று கூறினார்.
AI-க்கு புது விளக்கம்
தொடர்ந்து பேசிய அவர்,'' உலகைப் பொறுத்தவரை, AI என்றால் செயற்கை நுண்ணறிவு. ஆனால் என்னைப் பொறுத்தவரை, AI என்பது அமெரிக்க - இந்தியர்களின் வலிமையைக் குறிக்கிறது. இது உலகின் புதிய 'AI' சக்தி என்று கூறினார்.
மேலும் இந்தியாவில் 5ஜி இணையச் சேவை அதிக அளவில் வளர்ச்சியடைந்து விட்டது.அமெரிக்காவை விட 5ஜி சேவை சந்தை இந்தியாவில் பெரிய அளவில் உள்ளது. இவை அனைத்தும் இரண்டு ஆண்டுகளில் தான் நடந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் 6ஜி இணையச் சேவை சந்தையை உருவாக்க உள்ளதாகப் பெருமிதத்துடன் கூறினார்.