இந்த மந்திரவாதி எங்கு மறைந்திருந்தார்..? ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி!

BJP Narendra Modi India Madhya Pradesh Lok Sabha Election 2024
By Jiyath Apr 14, 2024 05:30 PM GMT
Report

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து பேசியுள்ளார் பிரதமர் மோடி. 

பிரதமர் மோடி

மத்தியப்பிரதேச மாநிலம் ஹஷாங்காபாத் நகரில் இன்று பாஜக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து பேசினார்.

இந்த மந்திரவாதி எங்கு மறைந்திருந்தார்..? ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி! | Pm Narendra Modi About Rahul Gandhis Promise

அவர் கூறியதாவது "ஒற்றை முடிவால் நாட்டில் வறுமையை ஒழித்துவிடுவோம் என்று காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி) கூறிய உறுதிமொழியால் ஒட்டுமொத்த நாடும் ஆச்சரியமடைந்துள்ளது. அதேவேளை, இத்தனை நாட்களாக இந்த மந்திரவாதி (ராகுல்காந்தி) எங்கு மறைந்திருந்தார் என்று நாட்டு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஜூம் மீட்டிங் பிரசாரத்தில் ஆபாச படம் - திமுக மீது குற்றம் சுமத்தும் தமிழிசை சௌந்தரராஜன்!

ஜூம் மீட்டிங் பிரசாரத்தில் ஆபாச படம் - திமுக மீது குற்றம் சுமத்தும் தமிழிசை சௌந்தரராஜன்!

ஆபத்தான உத்தரவாதங்கள்

நாடு சுதந்திரம் அடைந்தபின்னர் ஒரு கட்சியை சேர்ந்த குடும்பம் பல ஆண்டுகளாக மத்தியில் நேரடியாகவும், ரிமோர்ட் கண்ட்ரோல் மூலமும் அரசை நடத்தியது. அந்த குடும்பம் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தது.

இந்த மந்திரவாதி எங்கு மறைந்திருந்தார்..? ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி! | Pm Narendra Modi About Rahul Gandhis Promise

தேவை ஏற்படும்போது அந்த குடும்பம் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சீட்டு கட்டுபோல் அழித்தது. காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் மிகவும் ஆபத்தான தேர்தல் உத்தரவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையால் நாட்டின் நிதி நிலை திவால் ஆகிவிடும்" என்றார்.