உலகிலேயே மாபெரும் ஊழல் பிரதமர் மோடி செய்ததுதான் - விளாசிய ராகுல் காந்தி!

Indian National Congress M K Stalin Rahul Gandhi DMK Lok Sabha Election 2024
By Jiyath Apr 13, 2024 05:08 AM GMT
Report

உலகிலேயே மாபெரும் ஊழல் மோடி செய்ததுதான் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

பொதுக்கூட்டம் 

இந்தியா கூட்டணி சார்பில் கோவை செட்டிப்பாளையத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

உலகிலேயே மாபெரும் ஊழல் பிரதமர் மோடி செய்ததுதான் - விளாசிய ராகுல் காந்தி! | Biggest Corruption Done By Modi Says Rahul Gandhi

அப்போது பேசிய ராகுல் காந்தி "மோடியின் அரசு போக வேண்டிய நேரம் இது. மோடியின் அரசு என நான் சொன்னாலும், இது அதானியின் அரசு. அதானிக்காகவே, மோடி எல்லாம் செய்கிறார். சாலை, உள்கட்டமைப்பு, விமான நிலையம் என எதை அவர் விரும்புகிறாரோ, அதை மோடி கொடுத்துவிடுவார். தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற பல நிறுவனங்கள் மிரட்டப்பட்டன. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாலேயே அது குறித்த விபரங்கள் வெளியாகின.

தினகரன் வசம் அதிமுக; தேர்தலுக்கு பிறகு இது நடக்கும் - என்ன சொல்கிறார் அண்ணாமலை?

தினகரன் வசம் அதிமுக; தேர்தலுக்கு பிறகு இது நடக்கும் - என்ன சொல்கிறார் அண்ணாமலை?

மாபெரும் ஊழல்

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க. ஏழை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. ஊழல் செய்தவர்கள் பாஜக வைத்துள்ள வாஷிங் மெஷினுக்குள் சென்றால் சுத்தமாகிவிடுகிறார்கள்.

உலகிலேயே மாபெரும் ஊழல் பிரதமர் மோடி செய்ததுதான் - விளாசிய ராகுல் காந்தி! | Biggest Corruption Done By Modi Says Rahul Gandhi

எனது மூத்த அண்ணன் ஸ்டாலின். அவரைத் தவிர வேறு யாரையும் நான் அண்ணன் என அழைத்ததில்லை. வேலையில்லா திண்டாட்டம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 83 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். பாஜக தேர்தல் பத்திரம் மூலம் பல்லாயிரம் கோடி பணம் பெற்றுள்ளது.

உலகிலேயே மாபெரும் ஊழல் மோடி செய்ததுதான். விசாரணை அமைப்புகளை வைத்து ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அரசியல் சாசன ஆன்மா மீது மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தாக்குதல் நடத்துகிறது. இந்தியா என்பது மக்களுக்கானது, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சொந்தமானது அல்ல" என்றார்.