பிரதமர் மோடிக்கு அதுல ஏபிசி கூட தெரியாது : மீண்டும் சர்ச்சையினை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி

BJP Narendra Modi
By Irumporai Jun 11, 2022 04:40 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருளாதாரத்தில் ஏபிசி கூட தெரியாது என பாஜக முன்னாள் எம்.பி சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

சர்ச்சைக்கு பெயர் போன சுப்ரமணியன் சுவாமி

எப்போதும் சர்ச்சைக்களுக்கு பெயர் போன சுப்பிரமணியன் சுவாமி, பாஜகவின் எம்.பியாக இருந்துகொண்டே, பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கடும் விமர்சனங்களை முன் வைப்பார்.

பிரதமர் மோடிக்கு அதுல ஏபிசி கூட தெரியாது : மீண்டும் சர்ச்சையினை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி | Pm Modi Not Know Abc Economics Subramaniam Swamy

இந்த நிலையில் தமிழக பாஜகவின் வளர்ச்சி தொடங்கி, ரிசர்வ் வங்கி ஆளுநர் நியமனம், அரசின் வரிக்குறைப்பு நடவடிக்கைகள் என சுப்பிரமணியன் சுவாமி ஆளும் பாஜக அரசுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினாலும் பாஜக தலைமை சுப்பிரமணிய சுவாமிக்கு சரியான மரியாதை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் ட்விட்டரில் தர்மா என்பவர் பொருளாதார மந்த நிலை குறித்து கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பிரதமர் மோடிக்கு, சுப்பிரமணியன் சுவாமி எழுதிய கடித்தில் பொருளாதாரத்தை மீட்க, நடுத்தர வர்கத்தினருக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும்.

முதன்மை கடன் விகிதத்தை 85% ஆகவும், இறுதியாக 5% ஆகவும் குறைக்க வேண்டும் என சுவாமி குறிப்பிட்ட கடிதத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அந்த நபரின் ட்விட்டர் பதிவிக்கு பதில் அளித்துள்ள சுப்ரமணியசுவாமி :

மோடிக்கு பொருளாதாரத்தில் ஏபிசி கூட தெரியாது

சில சமயங்களில் நான் ஏன் மோடியை சந்தித்து பொருளாதாரம் பற்றி பேசவில்லை என கேள்வி எழுப்பிகின்றனர். 2014ஆம் ஆண்டு முதல் வருடம் மட்டும் இதை செய்தேன்.

ஆனால் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் பிரதமர் மோடிக்கு பொருளாதாரத்தில் ஏபிசி கூட தெரியாது.

அதனால் கடிதம் எழுத ஆரம்பித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. 2017ஆம் ஆண்டுக்கு பின் நான் பொதுமக்களுக்கு தெரிவிக்க ஆரம்பித்தேன் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.    

இலங்கை - இந்திய உறவு தொடர்பில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு