2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார்? - மோடி வெளியிட்ட தகவல்
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தானே பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருப்பேன் என பிரதமர் நரேந்திர மோடி சூசகமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2014. 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. நாட்டின் பிரதமராக மோடி தொடர்ந்து 2வது முறையாக பதவி வகித்து வருகிறார்.

இதனிடையே குஜராத்தின் பருச் பகுதி மக்களிடையே காணொளி வாயிலாக பிரதமர் மோடி உறையாற்றினார். அப்போது தம்மை சந்தித்த எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் 2 முறை பிரதமராக இருந்ததே போதும். இன்னும் வேறு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு தான் முற்றிலும் மாறுபட்ட படைப்பு என்பது அவருக்கு தெரியாது என பிரதமர் மோடி கூறினார்.
மேலும் இனி ஓய்வெடுக்கலாம் என தாம் நினைக்கவில்லை என்றும் நலத்திட்டங்கள் 100 விழுக்காடு மக்களை சென்றடைவதை உறுதி செய்வதே தமது கனவு எனவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய மோடி, முன்பைவிட மேலும் உத்வேகத்துடன் பணியாற்றப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்மூல்ம் 2024 தேர்தலில் நான் தான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என மோடி மறைமுகமாக கூறியுள்ளார்.