இலங்கை செல்கிறேன்; விமானத்தில் பறந்தபடியே சுப்பிரமணிய சுவாமி வெளியிட்ட புகைப்படம்

srilanka visit subramaniya swamy
By Fathima Oct 12, 2021 07:10 AM GMT
Report

பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகரான சுப்ரமணியன் சுவாமி (Subramanian Swamy) இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) அழைப்பினை ஏற்றுக் கொண்டு அவர் இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொள்வதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று நடைபெறவுள்ள நவராத்திரி பூஜையிலும் அவர் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விஜயத்தின் போது மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விமானத்தில் பயணிக்கும் போது எடுத்த புகைப்படத்தை சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.