T20 World Cup: நாடு திரும்பிய இந்திய அணி - நேரில் சந்தித்து வாழ்த்திய பிரதமர்!
இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இன்டீஸில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் பார்படாஸில் இருந்து தனி விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள் இன்று டெல்லி வந்தடைந்தனர்.
பிரதமர் வாழ்த்து
டெல்லி விமான நிலையத்தில் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். இதனையடுத்து பிரதமர் மோடியை இந்திய அணி வீரர்கள் சந்தித்தனர்.
அப்போது உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
A memorable occasion as #TeamIndia got the opportunity to meet the Honourable Prime Minister of India, Shri Narendra Modiji in Delhi ?@narendramodi | @JayShah pic.twitter.com/eqJ7iv9yVw
— BCCI (@BCCI) July 4, 2024