'தயவு செஞ்சு இத நம்பாதீங்க' - அஜித் மனைவி ஷாலினியால் ரசிகர்கள் அதிர்ச்சி!
தனது பெயரில் போலியான கணக்கு ஒன்று உள்ளதகா நடிகை ஷாலினி அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
அஜித் - ஷாலினி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

நடிகர் அஜித் கடந்த 2000-ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருணம் செய்துகொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
நம்ப வேண்டாம்
ஷாலினி அஜித்குமார் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அப்டேட் தருவார்.  இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

அதில் "எக்ஸ் தளத்தில் தனது பெயரில் போலியான கணக்கு ஒன்று உள்ளது. தயவு செய்து யாரும் அதனை நம்ப வேண்டாம் என்றும் பின் தொடர வேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளார். இதனால் அந்த போலி கணக்கை பின்தொடர்ந்து வந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    