பீரியட்ஸ் பிரச்சனை.. அதெல்லாம் பண்ணவே முடியல - ஓப்பனாக சொன்ன ஸ்ருதி ஹாசன்!
தான் அரியவகை வியாதியால் அவதிப்படுவதாக நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஸ்ருதி ஹாசன்
7-ஆம் அறிவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தொடர்ந்து 3, பூஜை, புலி, சிங்கம் 3, லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.

கடைசியாக இவர் நடிப்பில் சளார் திரைப்படம் படம் வெளியாகியிருந்தது. இதனிடையே மும்பையை சேர்ந்த ஓவியக்கலைஞரை காதலித்து வந்த ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் காதலை முறித்துக்கொண்டார். இந்நிலையில் தான் அரியவகை வியாதியால் அவதிப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரிய வகை நோய்
இதுதொடர்பாக பேசிய ஸ்ருதி ஹாசன் "நான் 'பிசிஓஎஸ்' என்ற அரிய வகை நோயால் அவதிப்படுகிறேன். இதனால் மாதவிடாய் பிரச்சினை ஏற்பட்டு வேலைகளை சரியாக செய்ய முடியவில்லை.

இதன் காரணமாக நிறைய விஷயங்களை இழந்து இருக்கிறேன். கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களிடமும், இயக்குநர்களிடமும் எனக்கு இருக்கும் பிரச்சனையை சொல்லி படப்பிடிப்பை இன்னொரு நாளில் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல முடியாது. வேதனையை பொறுத்துக்கொண்டு சிரித்தபடி சண்டை காட்சியானாலும், பாடல் காட்சிகளானாலும் நடித்து வருகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம் IBC Tamil
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil