விமானத்தில் நடந்த கொடூரம் - உடல் சிதைந்து பலியான நபர்!
விமானம் ஒன்றின் இயந்திரத்தில் சிக்கி மெக்கானிக் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பராமரிப்பு வேலை
ஈரானின் சபஹர் கொனாரக் விமான நிலையத்தில் டெஹ்ரானில் இருந்து விமானம் ஒன்று வந்தது. தொடர்ந்து, அதிலிருந்து பயணிகள் இறங்கினர்.
அதன்பின், அபோல்ஃபாசல் அமிரி என்ற மெக்கானிக் தனது வழக்கமான பராமரிப்பு வேலைகளை செய்துகொண்டிருந்துள்ளார். இதற்கிடையில், விமானத்தின் வலது இறக்கையில் உள்ள இயந்திரத்தை திறந்து சோதனைக்காக இயக்கப்பட்டது.
மெக்கானிக் பலி
அப்போது கவனக்குறைவாக நெருங்கிய அந்த மெக்கானிக், அந்த இயந்திரத்தால் ஈர்க்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து அந்த இயந்திரம் தீ பற்றி எரிந்துள்ளது.
உடனே, அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்த உதவிக் குழுவினர் அவரது உடலை இயந்திரத்தில் இருந்து மீட்டுள்ளனர்.
தற்போது, இச்சம்பவம் குறித்து விமான போக்குவரத்து ஆணையம் விசாரணையை தொடங்கி மேற்கொண்டு வருகிறது.