திருமண மோதிரம் அணிய அனுமதி மறுத்த மேலாளர் - இப்போது லட்சத்தில் சம்பாதிக்கும் ஊழியர்!

Australia World
By Jiyath Oct 30, 2023 04:16 AM GMT
Report

திருமண மோதிரத்தை அணிய அனுமதி மறுக்கப்பட்டதால் வேலையை விட்ட ஊழியர் இப்போது லட்சத்தில் பணம் சம்பாதிக்கிறார். 

வேலையை விட்ட நபர்

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆரோன் என்பவர் அங்குள்ள எலெக்ட்ரிக்கல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தில் உலோகத்திலான எந்தவொரு ஆபரணங்களையும் அணிந்து கொள்ள அனுமதி கிடையாது.

திருமண மோதிரம் அணிய அனுமதி மறுத்த மேலாளர் - இப்போது லட்சத்தில் சம்பாதிக்கும் ஊழியர்! | Man Left Job For Not Allowed To Wear Wedding Ring

இந்நிலையில் ஆரோன் தனது திருமண மோதிரத்தை நிறுவனத்திற்கு அணிந்து சென்றுள்ளார். அதற்கு அவரது மேலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். மோதிரம் அணிந்தால் அது கழன்று ஏதேனும் இயந்திரத்தில் சிக்கி பழுதடையும் என்றும் ஆரோனின் விரல் காயமடைய வாய்ப்பு உள்ளது என்றும் மேலாளர் கூறியுள்ளார்.

ஆனால் ஆரோனுக்கு அந்த கரணம் ஏற்புடையதாக இல்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆரோன் அந்நிறுவன வேலையை விட்டு தனியாக சிலிகான் மோதிரங்களை விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்கியுள்ளார். அவருக்கு அந்த யோசனையை அவரது மனைவிதான் கூறியுள்ளார்.

இந்த நகரத்தில் ஒரே நேரத்தில் 2 நாட்டில் இருக்கலாம்; எல்லாமே இங்கு 2 தான் - அதெப்படி?

இந்த நகரத்தில் ஒரே நேரத்தில் 2 நாட்டில் இருக்கலாம்; எல்லாமே இங்கு 2 தான் - அதெப்படி?

புதிய தொழில்

இது குறித்து ஆரோன் கூறுகையில் "நான் அந்த மோதிரம் இன்றி இருக்க முடியாது. அதுதான் என் வாழ்க்கையில் மிக சிறப்பான அம்சம் . அது என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்றியமைத்து விட்டது. சிலிகான் மோதிரம் அணிய விரும்பும் மக்கள், அதை எப்படியும் பிற நாடுகளில் இருந்துதான் வாங்குகின்றனர்.

திருமண மோதிரம் அணிய அனுமதி மறுத்த மேலாளர் - இப்போது லட்சத்தில் சம்பாதிக்கும் ஊழியர்! | Man Left Job For Not Allowed To Wear Wedding Ring

நாம் ஏன் அதையே தொழிலாகச் செய்யக் கூடாது என்று எண்ணினோம். என் சகோதரியை சம்மதிக்க வைத்து, ஒரு வழியாக ரூ.7 லட்சம் பணம் திரட்டினோம். அதைக் கொண்டு டஃப் ரிங்க்ஸ் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை திறந்து சிலிகான் மோதிரங்களை விற்பனை செய்யத் தொடங்கினோம். ஒரு மோதிரத்தின் விலை 16 டாலர் (ரூ.1,330) என்ற மதிப்பில் விற்பனையாகிறது. சுமார் 16 விதமான டிசைன்களில் கிடைக்கிறது.

இவை 100 சதவீதம் சிலிகானில் தயார் செய்யப்படுகிறது. இதில் தண்ணீர் இறங்காது. 240 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கான வெப்பத்தை தாங்கும்" என்று கூறினார். திருமண மோதிரம் அணியக்கூடாது என்ற மேலாளரின் உத்தரவால் வேலையை விட்ட ஆரோன் மற்றும் அவரது மனைவி இருவரும், இப்போது அதே மோதிர தொழில் மூலம் மாதத்திற்கு ரூ.6 லட்சம் வரை பணம் சம்பாதிக்கின்றனர். அதில் லாபம் மட்டும் ரூ.3 லட்சம் கிடைக்கிறதாம்.