தகாத உறவு; இரவெல்லாம் டார்ச்சர் - தோழியுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி!

Cuddalore Crime
By Sumathi Jun 03, 2023 04:56 AM GMT
Report

பெண் ஒருவர் தோழியுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார்.

தகாத உறவு

கடலூர், T. பாளையம் புற்றுகோவில் அருகேகரும்பு தோட்டம் ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. தோட்டத்திற்கு வேலைக்கு சென்றவர்கள் அங்கு துர்நாற்றம் வீசுவதை அறிந்து அப்பகுதியில் பார்த்த போது, முகம் மற்றும்

தகாத உறவு; இரவெல்லாம் டார்ச்சர் - தோழியுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி! | Illegal Affair Cuddalore Woman Murder Her Husband

உடலின் பகுதிகள் சிதைந்து நிலையில் ஆண் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்தவர் வடலூர் பார்வதிபுரத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்தது.

கணவன் கொலை 

கூலித் தொழிலாளியான இவரது மனைவி மஞ்சுளாவிடம் விசாரணை நடத்தினர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜசேகருக்கு திருப்பூரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது.

தனது குடும்பத்திற்கு சரியான முறையில் பணம் வழங்காததால் மஞ்சுளா அவரது மூன்று பெண் குழந்தைகளுடன் அவதியடைந்து வந்துள்ளார். மேலும் தினமும் குடித்துவிட்டு வந்த மஞ்சுளாவிற்கு தொடர்ந்து பாலியல் டார்ச்சரும் கொடுத்து வந்ததுடன், ஒத்துழைக்க மறுத்தால் அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார்.

இதனால் மனைவி தனது தோழி வினோதினியுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டு, ராஜசேகரை தனியாக அழைத்து மதுவில் விஷம் கலந்து கொடுக்க மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். அதன் பின் இவர்கள் நாடகமாடியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் வினோதினி, கணவர் சசிக்குமார், அவருடைய நண்பர் மோகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.