பழைய தலையணையால் இப்படி ஒரு ஆபத்தா? கழிப்பறையை விட மோசம் - ஷாக் தகவல்!
பழைய தலையணையில் அதிகப் பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.
பழைய தலையணை
அமெரிக்காவைச் சேர்ந்த "நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன்" என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தி வெளியிட்டுள்ளது.
அதில் தலையணை உறைகளை ஒரு வாரம் துவைக்காமல் விட்டாலே அதன் உறைகளில், கழிப்பறை இருக்கையை விட அதிகப் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள் ஆகியவற்றை நாம் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். இல்லை என்றால், அவற்றில் காலப்போக்கில் கணிசமான அளவு பாக்டீரியாக்கள் குவியும்.
அதிகப் பாக்டீரியா
ஒரு மாதம் துவைக்காமல் இருக்கும் தலையணை உறைகள் மற்றும் விரிப்புகளில், ஒரு சதுர அங்குலத்திற்குப் பல லட்சம் பாக்டீரியா காலனிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுவாசப் பிரச்சனைகள் கூட ஏற்படலாம்.
தலையணை உறைகளில் தூசிப் பூச்சிகள், பூஞ்சை வித்திகள் மற்றும் செல்லப் பிராணிகளின் முடி ஆகியவை சேர்வதால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும். தும்மல், மூக்கடைப்பு, கண்களில் நீர் வடிவது ஆகியவை ஏற்படும்.
ஸ்டெஃபிலோகாக்கஸ் (ஸ்டாப் தொற்று) மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் போன்ற பாக்டீரியா தொற்றுகளும் அசுத்தமான தலையணை உறைகள் மூலம் பரவலாம்.