விபரீத ஆசை.. எச்சரித்தும் கேட்கவில்லை - எரிமலைக்குள் தவறி விழுந்த இளம்பெண்!
இளம்பெண் ஒருவர் எரிமலைக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபரீத ஆசை
சீனாவை சேர்ந்த ஹுவாங் லிஹோங் (31)- ஜாங் யாங் என்ற தம்பதி இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள இஜென் என்ற எரிமலை பகுதிக்கு சென்றுள்ளனர்.
இந்த பகுதி பார்ப்பதற்கு நீல வண்ணத்தில் காட்சி தரும். இதனால் எரிமலைக்கு அருகில் சென்று புகைப்படம் எடுக்க லிஹோங் விரும்பியுள்ளார். அப்போது திடீரென மலையின் 246 அடி ஆழ பள்ளத்திற்குள் அவர் தவறி விழுந்துள்ளார்.
பெண் உயிரிழப்பு
முதலில் எரிமலையின் முனை பகுதியில் 8 அல்லது 9 அடி தொலைவிலேயே அவர் பாதுகாப்பாக நின்றுள்ளார். ஆனால், புகைப்படத்தின் பின்னணி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நெருங்கி சென்றுள்ளார். அப்போது லிஹோங்கின் ஆடை காற்று வேகத்தில் இழுத்ததில் அவர் எரிமலைக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த தம்பதியின் சுற்றுலா வழிகாட்டி பலமுறை எச்சரித்தும், லிஹோங் அதனை கேட்டுக்கொள்ளவில்லை. இதனையடுத்து 2 மணிநேர தேடுதலுக்கு பின்பு அவரது உடல் மீட்கப்பட்டது. லிஹோங் மலை பகுதியில் விழுந்ததில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.