6,600 படிக்கட்டுகள்.. கால் நடுங்கி தடுமாறும் பயணிகள் - சீன கோவிலின் வீடியோ வைரல்!

Viral Video China World
By Jiyath Apr 22, 2024 05:08 AM GMT
Report

தாய் மலை

சீன நாட்டின் தைஷான் பகுதியில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான தாய் மலை உள்ளது. கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலை 1,545 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள.

6,600 படிக்கட்டுகள்.. கால் நடுங்கி தடுமாறும் பயணிகள் - சீன கோவிலின் வீடியோ வைரல்! | People Regret Climbing 6600 Steps Chinas Taishan

இதன் உச்சியை அடைய வேண்டுமெனில் 6,600 படிக்கட்டுகள் ஏற வேண்டும். இங்குள்ள கோவிலை தரிசிக்கவும், கலாச்சார சின்னங்களை பார்வையிடவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். 

வைரல் வீடியோ 

ஆனால், இந்த 6,600 படிகளை அவர்களால் சாதாரணமாக ஏற முடிவதில்லை. அதற்குள் அவர்களின் கால்கள் வலுவிழந்து விடுகிறது. இந்த மலையில் ஏறுவதற்கு பயணிகள் படும் கஷ்டங்கள் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

6,600 படிக்கட்டுகள்.. கால் நடுங்கி தடுமாறும் பயணிகள் - சீன கோவிலின் வீடியோ வைரல்! | People Regret Climbing 6600 Steps Chinas Taishan

அந்த வீடியோவில், சுற்றுலாப் பயணிகள் படியேற முடியாமல் ஊர்ந்து செல்லும் காட்சிகளும், சிலர் கால்கள் நடுங்கியதால் அவர்களை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோக்கள் வைரலாகி 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.