இந்தோனேசியா: எரிமலை விளிம்பில் 700ஆண்டு விநாயகர் சிலை - மக்களை காக்கும் அதிசயம்!
இந்தோனேசியாவில் எரிமலை விளிம்பில் உள்ள விநாயகர் சிலை தங்களை பாதுகாப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
விநாயகர் சிலை
இந்தோனேசியாவில் உள்ள பிரபலமான 'ப்ரோமோ' எரிமலையில் 700 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை ஒன்று உள்ளது. இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 141 எரிமலைகள் உள்ளன.
அதில் குறைந்தது 130 எரிமலைகள் இன்னும் செயலில் (எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் திறன் கொண்டது) உள்ளன. அப்படி சில காலம் முன்னர் வரை ஆக்டிவாக இருந்தது தான் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மவுண்ட் ப்ரோமோ எரிமலை. இது தற்போது வெடிப்பதில்லை.
இதற்கு காரணம் அங்குள்ள விநாயகர் சிலைதான் என்று கூறுகின்றனர். அதற்கான காரணமாக கூறப்படுவது 'ப்ரோமோ' என்ற சொல் இந்து முறைப்படி படைப்பின் கடவுளான பிரம்மாவின் ஜாவானிய உச்சரிப்பிலிருந்து பெறப்பட்டது. டெங்கர் மாசிஃப் என்ற பழங்குடியினர் தான் இந்த மலையை சுற்றி அதிகம் வசிக்கின்றனர்.
மக்களின் நம்பிக்கை
முன்னர் அடிக்கடி எரிமலை வெடித்ததால் இந்த மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மலையை வெடிக்காமல் பாதுகாக்க 700 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் மூதாதையர்கள் இங்கு ஒரு விநாயகர் சிலையை வைத்ததாகவும், அன்றிலிருந்து இன்று வரை இந்த எரிமலை சீற்றம் பெறவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்த எரிமலையில் இருந்து விநாயகப் பெருமான் தங்களைக் காப்பாற்றுவதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இங்கு விநாயகப் பெருமானை வழிபடுவது மட்டுமின்றி, பூக்களும் பழங்களும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
அப்படி செய்யாவிட்டால் எரிமலை வெடித்து மக்களை தின்றுவிடும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த இடம் சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்க்கிறது. இந்தோனேசியா செல்லும் சாகச விரும்பிகள் இந்த இடத்தை பார்த்து வருகின்றனர்.