PF கணக்கின் சிறந்த பலன்கள் - இந்த விஷயத்த அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
PF கணக்கு தொடர்பான சிறந்த பலன்களை தெரிந்து கொள்வோம்.
PF கணக்கு
திட்டம் 1952ன் படி, எந்த ஒரு நிறுவனத்தில் தனி நபருக்கு மாதம் ரூ.15 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் இருந்தால், அந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்கில் சேர்க்கப்படுகிறார்.
அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, தக்கவைப்பு படிகள் போன்றவற்றை உள்ளடக்கிய அவர்களது சம்பளத்தில் 12 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். இதேபோல், முதலாளியும் சம்பளத்தில் 12 சதவீதத்தை பிஎஃப் நிதிக்கு வழங்க வேண்டும். ரூ.15,000 க்கு மேல் சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு PF கணக்கு தொடங்க வேண்டும்.
என்ன பலன்கள்?
இதில், PF பணத்தை இரண்டு சூழ்நிலைகளில் திரும்பப் பெறலாம். முதலில், 58 வயதில் ஓய்வு பெறும் போது பணத்தை திரும்பப் பெறலாம். இரண்டாவதாக, ஓய்வு பெறுவதற்கு முன்பு பணத்தை திரும்பப் பெறலாம். ஒரு மாதத்திற்கும் மேலாக வேலையில்லாமல் இருக்கும்போது, அவர் தனது EPF தொகையில் 75% வரை திரும்பப் பெற முடியும்.
2 மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருந்தால், மீதமுள்ள 25%-ஐயும் பெறலாம். தனிநபர் தனது மாதாந்திர அடிப்படை சம்பளத்தை விட 6 மடங்கு அல்லது முழுத் தொகையையும் பணியாளரின் பங்களிப்பிலிருந்து வட்டியுடன் (எது குறைவாக இருந்தாலும்) பெற இயலும்.
திருமணம் மற்றும் கல்வி தொடர்பான விஷயங்களில் பணியாளரின் பங்களிப்பில் பாதியை 7 வருட சேவைக்குப் பிறகு திரும்பப் பெறலாம்.