இந்தி பேசும் மாநிலங்கள்; 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது - ஆய்வில் முக்கிய தகவல்!
இந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கூடுதல் மொழி
நெதர்லாந்தை சேர்ந்த குளோபல் டேட்டா லேப் (Global Data Lab) என்னும் நிறுவனம், மொழிகள் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்தவர்கள் கூடுதல் மொழிகளைக் கற்க அதிக விருப்பம் உள்ளவர்களாக இருக்கின்றனர். அதே நேரத்தில் இந்தி பேசுபவர்கள் கூடுதல் மொழியை கற்பதில் ஆர்வம் இல்லாதவர்களாக இருக்கின்றனர்.
ஆய்வு தகவல்
1991-ல் தமிழ்நாட்டில் 14.5 சதவீத மக்கள் தமிழுடன் கூடுதலாக ஒரு மொழியை பேசுபவர்களாக இருந்தனர். இது 2011-ல் 22 சதவீதமாக அதிகரித்தது. இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழியை மட்டும் பேசுபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான், உ.பி. இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் இந்தி பேசும் மக்கள் பிற மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தி பேசாத மாநிலங்கள் 2-வது மொழியாக ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில், தமிழுடன், ஆங்கிலமும் தெரிந்தவர்களின் விகிதம் 1991-ல் 13.5 சதவீதமாகவும், 2011-ல் இது 18.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.