படையெடுக்கும் வாடகை தாய்மார்கள் - தங்கும் வீடுகளாக மாறும் தனியார் விடுதிகள்
தனியார் தங்கும் விடுதிகள், வாடகை தாய்மார்கள் தங்கும் வீடுகளாக மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாடகை தாய்
நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, மேத்தா நகர், அண்ணா நெடும்பாதை, கில் நகர் உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் தனியார் விடுதிகள் இயங்கி வருகிறது.
இந்நிலையில், குழந்தைப்பேறு கிடைப்பதில் தாமதம், குழந்தையின்மை போன்ற காரணங்களால் செயற்கை கருத்தரிப்பு மையங்கள், மருத்துவமனைகளும் அதிகரித்து வருகிறது.
தனியார் விடுதிகள்
இதனால் வங்கதேசம் உட்பட வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து குடு்ம்பத்துடன் வரும் பெண்கள் பலரை வாடகை தாய்மார்களாக மருத்துவமனைகள் ஒப்பந்தம் செய்வதாக கூறப்படுகிறது. அவர்கள் ஓராண்டு வரை தங்கி சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதனால் இந்த தனியார் விடுதிகள் தற்போது வாடகை தாய்மாா்களுக்கான வாடகை வீடுகளாக மாறி வருகின்றன. இதற்கிடையில், வீடுகளில் வாடகைக்கு இருப்பவர்கள், விடுதிகளில் தங்கியிருப்பவர்களின் பட்டியலை அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.