பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு - மூடப்பட்ட பெட்ரோல் பங்க்குகள்.. மக்கள் அவதி!
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல்-டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. 2,000 பெட்ரோல் பங்க்குகளில் எண்ணெய் காலியாகிவிட்டதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
எரிபொருள் நெருக்கடி
இதனால் பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. இது அந்த மாநிலங்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் இத்தகைய கூடுதல் தேவையையும் சமாளிக்கும் வகையில் நாடு முழுவதும் போதுமான அளவுக்கு பெட்ரோல்-டீசல் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தேவை அதிகரிப்பு
நாட்டின் சில பகுதிகளில் பொதுத்துறை பெட்ரோல் விற்பனை நிலையங்களில் (பங்க்) கடந்த சில நாட்களாக விற்பனை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
பெட்ரோல்-டீசலுக்கு 50 சதவீதம் அளவுக்கு கூடுதல் தேவை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் விற்பனை நிலையங்களில் தாமதம், வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரம் அதிகரிப்பு போன்றவை நடந்து வருகின்றன.
இது, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் வினியோக தடைகள் பற்றிய யூகங்களுக்கு வழிவகுத்து உள்ளது. விவசாய நடவடிக்கைகள், மொத்தமாக வாங்குபவர்கள் தங்கள் கொள்முதலை பெட்ரோல் பம்புகளுக்கு மாற்றியது மற்றும் தனியார் விற்பனை நிறுவனங்களில் வாங்குவோர்
பெட்ரோல்-டீசல் உற்பத்தி
பொதுத்துறை நிறுவனங்களுக்கு கொள்முதலை மாற்றியது போன்றவை காரணமாக இந்த தேவை அதிகரிப்பு நிகழ்ந்து உள்ளது. எனினும் நாட்டின் பெட்ரோல்-டீசல் உற்பத்தியானது தேவையை விட அதிக அளவுக்கு உள்ளது.
இதன் மூலம் எத்தகைய திடீர் தேவை அதிகரிப்பையும் சமாளிக்க முடியும். அதேநேரம் தற்போதைய திடீர் தேவை அதிகரிப்பு காரணமாக சில தற்காலிக தொழில்நுட்ப பிரச்சினைகளை உள்ளூர் மட்டத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே எண்ணெய் நிறுவனங்கள், டெப்போக்கள் மற்றும் வினியோக மையங்களில் இருப்புகளை அதிகரித்தல், சில்லறை விற்பனை நிலைய சேவைக்காக டேங்கர் லாரிகளின் கூடுதல் இயக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரச்சினை சரி செய்யப்படும்.
மேலும் டெப்போக்கள் மற்றும் வினியோக மையங்களின் வேலை நேரம் நீட்டிப்பு மற்றும் தேவைப்படும் மாநிலங்களில் சப்ளை செய்வதற்கு கூடுதல் எரிபொருட்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு குறித்து பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் தகவல் வெளியிட்டு உள்ளன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் கட்டணங்கள் அதிகரிக்காததால்,
அரசுப் போக்குவரத்துக்கழகம் போன்ற மொத்தமாக வாங்குபவர்கள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வாங்குவதை விட பெட்ரோல் பம்புகளிலேயே நிரப்புவதே இத்தகைய தேவை அதிகரிப்புக்கு காரணம் என அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.
எனினும் சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்குவதற்கான பெட்ரோல்-டீசல் போதுமான அளவுக்கு கையிருப்பு இருப்பதாகவும் கூறியுள்ளன. தமிழகத்திலும் சில இடங்களில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
தேனி, பெரியகுளம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இனி முன்பணம் செலுத்தும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் வினியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்ள இருக்கின்றன.
சகோதரிகள் வாடகைக்கு.. தனிமையில் வாடுபவர்களுக்கு சிறப்பு சேவை! எங்கு தெரியுமா?