சகோதரிகள் வாடகைக்கு.. தனிமையில் வாடுபவர்களுக்கு சிறப்பு சேவை! எங்கு தெரியுமா?
தனிமையால் அவதிப்படுபவர்களுக்கு உதவ, ஜப்பானில் சிறப்பு சேவை வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு சேவையின் கீழ் இளைஞர்கள் தங்கள் சகோதரிகளை வாடகைக்கு எடுக்கலாம்.
தனிமை
மகிழ்ச்சியான குடும்ப கலாச்சாரம் இப்போது வெறும் காட்சி படங்களில் மட்டுமே இருக்கும் அளவுக்கு குறைந்து வருகிறது. காலம் மற்றும் வயதுக்கு ஏற்ப சிலர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்.
ஒரு குடும்பம் பல்வேறு காரணங்களால் பிளவுபடுகிறது. அதன் காரணமாகவும் தனிமையாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தனிமையால் அவதிப்படுபவர்களுக்கு உதவ, ஜப்பானில் சிறப்பு சேவை வழங்கப்படுகிறது.
சிறப்பு சேவை
இந்த சிறப்பு சேவையின் கீழ் இளைஞர்கள் தங்கள் சகோதரிகளை வாடகைக்கு எடுக்கலாம். ஆம், இப்படி வாடகைக்காக பணியாற்ற வரும் இந்த சகோதரிகள் நீங்கள் குடும்பத்துடன் ஒன்றாக இருப்பதை போல உங்களை உணரவைப்பார்கள்.
இதன் காரணமாக அவர்களின் தனிமை நீங்குகிறது. செல்போன், கேம் உட்பட பல சாதனங்களில் தொடர்ந்து மூழ்கி கிடக்கும் பல இளைஞர்கள் விடுதலை பெறுகிறார்கள். ஜப்பானிய இளைஞர்கள் ஹிக்கிகோமோரி என்ற மூளைப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ட்ரீம் ஸ்டார்ட்
இந்த மனநிலையில், இளைஞர்கள், குறிப்பாக ஆண்கள், சமூகத்திலிருந்து முற்றிலும் விலகிக்கொண்டு, வீட்டை விட்டு வெளியே வர விரும்புவதில்லை. அப்படிப்பட்டவர்களை மன அழுத்தத்திலிருந்து வெளியே கொண்டு வர ஜப்பானில் சகோதரிகள் பணியமர்த்தப்படுகிறார்கள்.
இளைஞர்களின் இத்தகைய நிலைமையை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமலும், யாரிடமும் சொல்ல முடியாமலும் பெற்றோர்கள் தவிக்கின்றனர். தங்கள் குழந்தைகளின் சிகிச்சைக்கான வழிகளைத் தேடுகிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு ட்ரீம் ஸ்டார்ட் என்ற ஜப்பானிய நிறுவனம் உதவிக்கரம் நீட்டியது. பிபிசி 2019 ஆம் ஆண்டில் ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியது. அதில் வாடகை சகோதரிகளின் விவரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.
ஈரானில் தொடர்ந்து 7 முறை நிலநடுக்கம் - மக்கள் அச்சம்..!