ஈரானில் தொடர்ந்து 7 முறை நிலநடுக்கம் - மக்கள் அச்சம்..!

Earthquake Iran
By Thahir Jun 15, 2022 09:49 PM GMT
Report

ஈரான் நாட்டில் தொடர்ந்து 7 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கிஷ் தீவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 5.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

ஈரானில் தொடர்ந்து 7 முறை நிலநடுக்கம் - மக்கள் அச்சம்..! | 7 Consecutive Earthquakes In Iran

இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவு கோலில் 4 புள்ளிகளாக பதிவாகின. அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்கள் கிஷ் தீவை கடுமையாக உலுக்கியது.

இதனால் வீடுகள்,அலுவலகங்கள்,வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகள் மற்றும் கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

துபாய் கத்தார் ஆகிய அரேபிய நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு உதவ நான் விரும்பவில்லை - உயர்நீதிமன்றத்திற்கு காவலர் கடிதம்