சென்னை அருகே லேசான நிலநடுக்கம்!

Earthquake Chennai Small
By Thahir Apr 03, 2022 04:24 AM GMT
Report

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நேற்று நள்ளிரவு 1.10 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் இருந்து வடகிழக்கே 85 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் சென்னையில் இருந்து 175 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னையிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.