412 நாள் சிறை... 50-வது முறை காவல் நீட்டிப்பு - அமலாக்கத்துறைக்கு நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு!
குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை முதன்மை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
செந்தில் பாலாஜி
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ,கடந்தாண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து 50 வது முறை காவல் நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குற்றச்சாட்டுப் பதிவுக்காக அவரை ஆஜர்படுத்த வேண்டுமென முதன்மை அமர்வு நீதிமன்றம், ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் குற்றச்சாட்டுப் பதிவை தள்ளிவைக்கக்கோரியும், விடுபட்ட வங்கி ஆவணங்களை வழங்கக்கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை மனுக்களுக்கு அமலாக்கத்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
412 நாள் சிறை...
அப்போது குற்றச்சாட்டுப் பதிவை 15 நாட்களுக்கு தள்ளி வைக்கக்கோரி புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கில்குற்றச்சாட்டு பதிவு தொடங்கிவிட்டால் மேல்முறையீடு மனுக்கள் அனைத்தும் செல்லாததாகிவிடும் என்று செந்தில் பாலாஜி வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் தள்ளி வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இவ்வாறு தொடர்ச்சியாக புதிது, புதிதாக மனுக்களைத் தாக்கல் செய்வதாக குற்றம்சாட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.அல்லி, செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை தள்ளுபடி செய்து, அமலாக்க துறை அதிகாரிகள் இந்த வழக்கின் ன் தீவிரத்தை புரிந்த்து கொண்டு குற்றச்சாட்டுப் பதிவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து வரும் ஆக.2-ம் தேதி ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.