வெளிவரும் செந்தில் பாலாஜி..? முன்னதாரணமாக அமைந்த நீதிமன்றம் தீர்ப்பு

Aam Aadmi Party V. Senthil Balaji Supreme Court of India Enforcement Directorate
By Karthick Apr 02, 2024 04:47 PM GMT
Report

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

செந்தில் பாலாஜி

தமிழக மின்வாரிய துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

will-senthil-balaji-get-bail-in-supreme-court

ஜாமீன் கோரி அவர் நீதிமன்றங்களை நாடிய போதிலும், அமலாக்கத்துறையின் கோரிக்கைகள் காரணமாக அவரின் ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டுள்ளது. தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த போதிலும், இன்னும் சட்டமன்ற உறுப்பினராகவே நீடிக்கிறார் செந்தில் பாலாஜி.

மீண்டும் நீட்டிப்பா..? தொடர்கதையான சிறைவாசம் - தவிக்கும் செந்தில் பாலாஜி

மீண்டும் நீட்டிப்பா..? தொடர்கதையான சிறைவாசம் - தவிக்கும் செந்தில் பாலாஜி

வெளிவருவாரா..?

ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில் ஜாமீன் வழங்க எந்தவொரு நிபந்தனையும் ஏற்க தயார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

will-senthil-balaji-get-bail-in-supreme-court

இந்த மனுவின் மீது வரும் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

will-senthil-balaji-get-bail-in-supreme-court

இந்த சூழலில் தான் இன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ள நிலையில் அதே போல முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.