மீண்டும் நீட்டிப்பா..? தொடர்கதையான சிறைவாசம் - தவிக்கும் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி
கடந்த ஜூன் மாதம் முதல் சிறைவாசம் அனுபவித்து வரும் செந்தில் பாலாஜி தொடர்ந்து ஜாமீன் கேட்டு மேல்முறையீடு மனுவை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நண்பர் கொங்கு மணி சொந்தமான இடங்களிலும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கட்டி வரும் கரூர் வீட்டிலும் வருமானவரி துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் நீட்டிப்பு
15-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை நீதிமன்றம்.இன்றுடன் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில். தற்போது புழல் சிலையில் காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படத்தப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டதால் புழல் சிலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். வரும் 29-ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.