உங்க மூக்கின் வடிவம் இப்படி இருக்கா?அப்போ உங்கள் குணமும், பலன்களும் இப்படி இருக்கும்!
மூக்கின் வடிவத்தை வைத்துக் கொண்டு உங்களின் குணாதிசயத்தை தெரிந்துகொள்ளலாம்.
மூக்கின் வடிவம்
நம்மில் பலருக்கு ஒருவித உடல் அமைப்பு உள்ளது. பொதுவாகக் கால் விரல்களை வைத்து உங்களின் குணாதிசயத்தைச் சொல்வதைக் கேட்டு இருக்கிறோம். ஆனால் மூக்கின் வடிவத்தை வைத்து அவரின் குணம் மற்றும் ஆளுமையைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியுமா? என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
நேரான மூக்கு இவர்களின் ஆளுமை மிகவும் கவர்ச்சிகரமானது. இவர்களிடம் இரக்கம், நம்பகத்தன்மை, நேர்மை, பொறுமை, சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் .இவர்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் நேர்மையானவர்களாகச் செயல்படுவார்கள்.
வளைந்த மூக்கு உள்ளவர்களின் இயல்பு எப்போதும் எளிமை, பணிவு, மற்றும் தாராள குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் கவனமாகப் பேசுவார்கள். அதுமட்டுமில்லாமல் மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடமாட்டார்கள்.
குணாதிசயம்
சதைப்பற்றுள்ள மூக்கு அதாவது தடிமனான அல்லது சதைப்பற்றுள்ள மூக்கு உடையவர்கள் கூர்மையாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் திட்டங்களைச் செய்யும் போது ஆழமாகச் சிந்தித்துச் செயல்படுவார்கள்.
பட்டன் மூக்கு மூக்கு சிறியதாகவும், வட்டமான நுனியாகவும் இருக்கிறதோ, அவர்களின் ஆளுமை மென்மையாக இருக்கும். அக்கறை, நம்பிக்கை, அன்பு, கற்பனைத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு எந்த வகையிலும் IBC தமிழ்நாடு பொறுபேற்காதது.