50 ஆண்டுகளாக "coco cola" குடித்து மட்டுமே வாழும் நபர் - மிரண்டுபோன மருத்துவர்கள்!

Swetha
in பொழுதுபோக்குReport this article
50 ஆண்டுகளாக கோகோ கோலா மட்டும் குடித்து உயிர்வாழும் நபர் குறித்து இந்த பதிவில் காணலாம்.
கோகோ கோலா
பிரேசிலில் உள்ள பாஹியாவைச் சேர்ந்த ராபர்ட் பெட்ரைரா என்ற நபர் ஒருவர் கடந்த 50 ஆண்டு காலமாக கோகோ கோலா குடித்து மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கூறுகிறார்.
70 வயதான ஓய்வு பெற்ற இவர் கோக்கின் மிகப்பெரிய ரசிகர் ஆவார். இப்போது அவர் நீரிழிவு மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற உடல் உபாதைகள் இருந்தபோதும் தொடர்ந்து கோக்கை விரும்பி அருந்தி வந்துள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று பரிந்துரைத்தபோது, கோக் பிரியரான இவர் மருந்தை கூட நீருடன் இல்லாமல் கோக் உடன் அருந்தியுள்ளார்.
மிரண்ட மருத்துவர்கள்
அவரது இதயத்தில் 6 ஸ்டென்ட்கள் போடும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. மேலும் பலமுறை மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கோக் மீதான ஆர்வம் அப்படியே இருந்துள்ளது.
ஆச்சரியம் அடைந்த மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில், உண்மையிலேயே ராபர் பெரைரா ஒரு விந்தையான மனிதர்தான். 50 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் வாழ்வது எந்த மனிதருக்கும் சாத்தியமற்ற ஒரு விஷயம். ஆனால் இவர் மட்டும் விதிவிலக்காக இருப்பது உண்மையிலேயே விநோதம்தான் என்று தெரிவித்தனர்.
சுவாரஸ்யமான இந்த மனிதன் தனக்கு பிடித்த குளிர்பானத்தை அளவுக்கு அதிகமாகவே உட்கொள்கிறார் அதாவது ஐஸ் கிரீம் சாப்பிடும்போது கூட அவருக்கு ஒரு கோக் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.