உணவுக்குப் பிறகு இதையெல்லாம் கண்டிப்பா சாப்பிடக்கூடாது..! என்னென்ன?
ஒரு சில உணவுகளை சாப்பாட்டிற்கு பிறகு கட்டாயம் தவிர்த்தல் அவசியம், அவை என்னென்னெ உணவுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நம்மில் பலருக்கு எதை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை தெரியாது. இதன் காரணமாக உணவு உண்ட பிறகும் விரும்பும் வெவ்வேறு உணவுகளை உட்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறோம்.
ஆனால், சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த உணவுகளை நீங்கள் சாப்பிட்டால், அவை உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்த விழிப்புணர்வுகளை அனைவரும் பெற்றிருப்பது அவசியம்.
காபி மற்றும் டீ
சாப்பிட்ட உடனேயே காபி அல்லது டீ சாப்பிடுபவர்கள் அதிகம். இதில் இருக்கும் நிகோட்டின் ரத்த சிவப்பணுக்களின் அளவைக் குறைக்கக்கூடியது. சாப்பிட்டவுடன் உடலுக்கு தேவையான புரதம் உறிஞ்சப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்,
டீ சாப்பிடும்போது, நிக்கோடின் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைக்கும் எதிர்மறை செயலில் ஈடுபடும். இனால், சாப்பிட்டவுடன் டீ காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
பழங்கள்
உணவு உண்ட உடனே பழங்களை உட்கொள்ளக் கூடாது. இப்படிச் செய்வதால் உடல் நலம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, பழங்களில் உள்ள சத்துக்களின் முழுப் பலனையும் உங்கள் உடலும் பெறாது.
ஒரு நபர் சாப்பிட்ட 1 மணி நேரத்திற்குப் பிறகு பழங்களை உட்கொள்ள வேண்டும்.
துரித உணவுகள்
துரித உணவுகளான எண்ணெய் அதிகம் நிறைந்த, பொரித்த, வறுத்த உணவுகள், நெஞ்செரிச்சல், உப்பிசம் போன்றவற்றை உருவாக்கும். குறிப்பாக அசைவ உணவுகளுக்கு பிறகு கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.
அசைவ உணவுகள் செரிமானமடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், மலசிக்கல் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தண்ணீர் கூடாது
உணவு உண்ட பிறகு உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. எந்த உணவுகளை சாப்பிட்ட பிறகுத் திரவமான பானங்களை அருந்தத்கூடாது. இது செரிமான அமைப்பில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
மேலும், ஒரு நபருக்கு உணவை ஜீரணிப்பதில் சிரமத்தை உண்டாக்கும். சாப்பிட்ட பிறகு சுமார் அரை மணி நேரம் கழித்து, தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

விரல்கள் அகற்றம்... உடல் குன்றி குழந்தை போல விஜயகாந்தை அழைத்து வந்த மனைவி! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்; Manithan

ஆவணியில் யார் வீட்டில் பணம் கொட்டப்போகுது? இந்த 5 ராசிக்காரர்களும் தொட்டதெல்லாம் பொன்னாகும்! Manithan

காத்திருக்கும் அதிர்ஷ்ட யோகம்! மகிழ்ச்சியில் திழைக்கப்போவது யார் தெரியுமா..! இன்றைய ராசிபலன் IBC Tamil

மிரட்ட வைக்கும் சீன கப்பலால் இந்தியாவுக்கு ஏற்பட போகும் பாதிப்புக்கள்..! வெளியாகிய அதிர்ச்சி தகவல் IBC Tamil
