உலகின் நம்பர் 1 இடத்தில் இத்தாலிய உணவு .. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் ?
2022 ஆம் ஆண்டில் உலகின் தலை சிறந்த உணவு வகைகளின் படியலில் இந்தியா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
பல்கோரியவை தலைமையிடமாக கொண்ட பிரபல இணையதளமான அட்லஸ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் தலை சிறந்த உணவு வகை பட்டியலை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.
அந்த வகையில் 2022 ஆண்டில் உலகின் தலை சிறந்த உணவு வகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி , இத்தாலியா உணவு முதலிடத்தை பிடித்துள்ளது. கிரேக்கம் மற்றும் ஸ்பானிஷ் உணவு வகைகள், மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ளன.
பொருட்கள், உணவுகள் மற்றும் பானங்களுக்கான பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிட்டுள்ளதாக டேஸ்ட் அட்லஸ் தெரிவித்தது. ஒட்டுமொத்தமாக இந்தியா 4.54 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
மேலும் 400க்கும் மேற்பட்ட பொருட்களில் கரம் மசாலா, நெய், மலாய், பட்டர் கார்லிக் நான் மற்றும் கீமா ஆகியவை இந்தியாவில் சிறந்த ரேட்டிங் பெற்ற உணவுகளாகும்