முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு.. போன் காலில் வந்த மிரட்டல் - பரபரப்பு!
தமிழக முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
மிரட்டல்
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தின் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், "தமிழக முதல்வர் வீடு உட்பட 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது" எனக் கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சேவை மையஊழியர், உதகை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அப்பொழுது உடனடியாக சென்னைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெடிகுண்டு
இந்நிலையில், வெடிகுண்டு வைத்துள்ளதாக அவர் கூறிய 7 இடங்களில் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். ஆனால், அந்த இடங்களில் குண்டு எதுவும் வைக்கப்படவில்லை, இந்த தகவல் தவறானது என்பதும் உறுதியானது.
இதனை தொடர்ந்து, அந்த தகவல் அளித்த நபரை விசாரித்ததில் அவர் உதகை அருகே தாம்பட்டியை சேர்ந்த தொழிலாளி கணேசன் என்பது தெரியவந்தது. நேற்று காலை வீட்டில் இருந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
அப்பொழுது விசாரணனியில் அவர், மதுபோதையில் இருந்ததால்108 அவசர சேவை மையத்துக்கு அழைத்து மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். மேலும், தொடர்ந்து அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.