கிரிமியா பாலத்தில் கார் வெடிகுண்டு வெடிப்பு - கொழுந்து விட்டு எரியும் தீ... - பதிலடி கொடுக்குமா ரஷ்யா?
உக்ரைனிடமிருந்து ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா பாலத்தில் இன்று கார் வெடிகுண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிமியா பாலத்தில் கார் வெடிகுண்டு வெடிப்பு
கிரிமியா பாலத்தில் இன்று காலை கார் வெடிகுண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
இந்த விபத்தில் கிரிமியாவிற்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்ட ஏழு எண்ணெய் டேங்கர்களுக்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
ரஷ்யாவில் இருந்து கிரிமியாவுக்கான ஒரே நில இணைப்பாக இந்த பாலம் 2018 இல் ஜனாதிபதி புடினால் திறக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியை மாஸ்கோ சட்டவிரோதமாக இணைத்தது.
இந்த பாலம், உக்ரைனில், குறிப்பாக தெற்கில் சண்டையிடும் ரஷ்ய வீரர்களுக்கு இராணுவ உபகரணங்களை எடுத்துச் செல்வதற்கும், அங்குள்ள துருப்புக்களையும் கொண்டு செல்வதற்கும் ஒரு முக்கிய போக்குவரத்து இணைப்பாக இருந்தது.
உக்ரைனில் சண்டை நடந்த போதிலும், ரஷ்யா இந்த பாலத்தை பாதுகாத்து வந்தது. தற்போது இந்த பாலம் தாக்கப்பட்டுள்ளதால் ரஷ்யா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், கெர்ச் ரயில் பாலத்தில் ஒரு ரயில் தீப்பிடித்து எரிவதை பார்க்க முடிகிறது. மேலும், அருகில் உள்ள சாலைப் பாலம் சேதமடைந்துள்ளது.
No one driving to Crimea today pic.twitter.com/Y7gpKi9HZ2
— Roland Oliphant (@RolandOliphant) October 8, 2022