தீபாவளிக்கு அடுத்த நாள் லீவு தான்...ஆனாலும்..? லீவோட அரசு வெச்ச செக்!!
தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை என தமிழக அரசு சார்பில் அறிவித்துள்ளது.
தீபாவளி விடுமுறை
தமிழக அரசு சார்பில் இந்தாண்டின் தீபாவளி தினம் வரும் நவம்பர் 12-ஆம் தேதி அதாவது வரும் ஞாயிற்று கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தீபாவளிக்கு அடுத்த நாளான அன்று அமாவாசை தினத்தன்று கேதார கௌரி விரதம் நிறைய பேர் கொண்டாடப்படும் காரணத்தால், அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் போன்றவர்களின் சார்பில் திங்கள் கிழமை அதாவது 13-ஆம் தேதியன்றும் விடுமுறை வழங்கப்படும் வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
விடுமுறை அறிவிப்பு
இந்த கோரிக்கைகள் அதிகளவில் எழுந்த நிலையில் தான் தற்போது தமிழக அரசு அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளது. அதாவது வரும் 13-ஆம் தேதியும் விடுமுறையாக அரசு நிறுவனங்களுக்கு, பொது நிறுவனங்களுக்கு, கல்வி நிலையங்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனால் அந்த விடுமுறையை ஈடுசெய்ய வரும் 18-ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.