தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் - அதிரவைக்கும் சிசிடிவி காட்சி!

Attempted Murder Crime Perambalur
By Sumathi Apr 26, 2024 10:57 AM GMT
Report

மகன் தந்தையை கொடூரமாக தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து விவகாரம் 

பெரம்பலூர், கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தை வேலு (65). இவருக்கு சங்கவி என்ற மகளும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர்.

மகளுக்கு திருமணமான நிலையில், சக்திவேலுக்கும் திருமணமாகி அவர் தனது மாமனார் வீட்டில் தங்கி அவர்களது ரைஸ் மில்லை கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது. குழந்தைவேலுவுக்கும் அவரது மகனிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தாகக் கூறப்படுகிறது.

குழந்தை வேலுவும் ரைஸ் மில் வைத்திருக்கும் நிலையில், தன்னை கண்டு கொள்ளவில்லை என்று சக்திவேல் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், குழந்தைவேலை அவரது மகன் சக்திவேல் தாக்கியதில் குழந்தைவேலின் மூக்கு மற்றும் தாடைகளில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

6 வயது மகள் கொடூரமாக வெட்டிக் கொலை - தந்தையின் வெறிச்செயல்!

6 வயது மகள் கொடூரமாக வெட்டிக் கொலை - தந்தையின் வெறிச்செயல்!

தந்தை கொலை

இதனையடுத்து, குழந்தைவேலு வீட்டிற்குத் திரும்பினார். இரவு வழக்கம் போல் தூங்கச் சென்ற குழந்தை வேலு, அடுத்தநாள் காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை, அவரது அறையில் சென்று பார்த்ததில் இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.


இது தொடர்பாக தகவல் அறிந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சக்திவேல் தந்தையை தாக்கியதும், ரத்தக்காயம் ஆனது, ஆபாச வார்த்தைகளால் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.