தங்கையை கழுத்தை நெரித்து கொன்ற அண்ணன்; தண்ணீர் கொடுத்த தந்தை - கொடூரம்!
தந்தை முன்னிலையில் சகோதரியை கழுத்து நெரித்து சகோதரன் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுகொலை
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தோபா தேக் சிங் நகரருகே வசித்து வருபவர் அப்துல் சத்தார். இவருக்கு மரியா பீபி (22) என்ற மகளும், இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இரவு வேளையில் படுக்கையறையில் பீபி இருந்தபோது, பைசல் என்ற சகோதரர் வந்துள்ளார்.
பின்னர் திடீரென பீபியை தாக்கி, 2 நிமிடங்களாக கழுத்தை நெரித்து கொலை செய்தார். அப்போது பக்கத்தில் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் அவர்களின் தந்தை அப்துல் சத்தார் அமர்ந்திருந்தார். மேலும், இந்த சம்பவத்தை மற்றோரு சகோதரர் ஷெபாஸ் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். பீபி உயிரிழந்தது உறுதியான பின், பைசலுக்கு அவரின் தந்தை தண்ணீர் கொடுக்கிறார்.
4 பேர் கைது
அதனை வாங்கி பைசல் குடிக்கிறார். இந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர் "பீபி இயற்கையான முறையில் உயிரிழக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
அப்துல், பைசல் மற்றும் ஷெபாஸ் ஆகியோரை கைது செய்தோம். இது ஆணவக் கொலை என்பதற்கான அனைத்து விஷயங்களும் உள்ளன. அந்த வீடியோவில் ஷெபாசின் மனைவியும் இருக்கிறார். அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த படுகொலைக்கான காரணம் தெரிய வரவில்லை. ஆனால், அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் பீபி பலமுறை வீடியோகாலில் பேசியுள்ளார். இதனை சகோதரர் பைசல் தொடர்ந்து கவனித்து வந்துள்ளார்" என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.