வெளிமாவட்ட மக்களுக்கும் ரூ.6000 கிடைக்குமா? ரேஷன் கார்டு முக்கியமா? அமைச்சர் விளக்கம்!
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6000 வெள்ள நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்பு
மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசு ரூ.6000 அறிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்,வெள்ளம் ஏற்பட்ட போது கமலாலயத்தைப் பூட்டிக்கொண்டு இருந்தவர் எல்லாம் வெள்ளம் வடிந்ததற்குப் பிறகு அறிக்கை விடுகிறார். எடப்பாடி பழனிசாமி முழங்கால் அளவு நீரில் நின்று பேசிவிட்டு சேலத்துக்கு சென்றுவிட்டார்.
நிவாரணம் யாருக்கு?
அங்கிருந்து நிவாரண நிதியை உயர்த்த வேண்டும் என அறிக்கை வெளியிடுகிறார். சென்னையில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் தொகை வழங்கப்படும். வரும் டிச.16ஆம் தேதி முதல் நிவாரண தொகைக்கான டோக்கன் வழங்கப்படும்.
அதன் பிறகு 10 நாட்களில் இதற்கான பணிகள் முடிக்கப்படும்.
தாலுகா வாரியாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்கப்படும். நிவாரணம் என்பது ஒரு ரெபரன்ஸ் லைனை வைத்து தான் தர முடியும். இன்று நாம் அதற்கு ரேஷன் கார்டுகளை வைத்துள்ளோம்.. இதனால் பாதிக்கப்படுவோர் அரசிடம் முறையீடு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.