மிக்ஜாம் புயல் எதிரொலி...சென்னையில் தக்காளி - வெங்காயம் விலை தெரியுமா..?
சென்னையில் மிக்ஜாம் புயலின் மீட்புப்பணிகள் பல இடங்களில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மிக்ஜாம் புயல்
சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளின் இயல்பு நிலையை முற்றிலுமாக புரட்டிப்போட்ட ஒரு புயலாக மிக்ஜாம் அமைந்துள்ளது. புயல், மழை, வெள்ளம் என தொடர்ந்து இயற்கை பேரிடர்களால் மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.
பல இடங்களில் தற்போதும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மக்கள் பலரும் அத்தியாவசிய தேவையான பால், காய்கறிகள் கூட கிடைக்காமல் தவித்து வருவதும் தொடர்ந்து வருகின்றது.
காய்கறிகளின் விலை
இதற்கிடையில், சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் வரத்து சற்று குறைந்து விலைகள் கணிசமான உயர்வை அடைந்துள்ளன என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். காய்கறிகளின் விலை பட்டியலை காணலாம்.
தக்காளி (கிலோ) - 32 ரூபாய்
வெங்காயம் (கிலோ) - 55 ரூபாய்
உருளை கிழங்கு (கிலோ) - 32 ரூபாய்
கத்திரிக்காய் (கிலோ) - 40 ரூபாய்
வெண்டைக்காய் (கிலோ) - 45 ரூபாய்
முருங்கைக்காய் - 80 ரூபாய்
கேரட் - ஊட்டி (கிலோ) - 35 ரூபாய்
கேரட் - பெங்களூர் (கிலோ) - 20 ரூபாய்
சின்ன வெங்காயம் (கிலோ) - 110 ரூபாய்
பீன்ஸ் (கிலோ) - 60 ரூபாய்
பீட்ரூட் ஊட்டி (கிலோ) - 40 ரூபாய்
பீட்ரூட் கர்நாடக (கிலோ) - 25 ரூபாய்
முட்டை கோஸ் - 10 ரூபாய்
முள்ளங்கி (கிலோ) - 40 ரூபாய்
அவரைக்காய் (கிலோ) - 50 ரூபாய்
அதே நேரத்தில் மார்கெட்டிற்கு வந்த பூக்கள் பெரும்பாலும் விற்பனையாகாத நிலையில், ஆங்காங்கே கீழே கொட்டப்பட்ட நிலையில், வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.