சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக 17 பேர் உயிரிழப்பு!

Chennai Death Michaung Cyclone
By Thahir Dec 05, 2023 06:21 PM GMT
Report

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

17 பேர் உயிரிழப்பு 

மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக 17 பேர் உயிரிழப்பு! | 17 People Lost Their Lives Due To Michaung Cyclone

இந்நிலையில், சென்னையில் கனமழை காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மழைநீரில் மூழ்கி, மின்சாரம் தாக்கி, மரங்கள் மற்றும் சுவர்கள் விழுந்து என வெவ்வேறு நிகழ்வுகளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

நீர் வெளியேற்றம் அதிகரிப்பு

புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து முடங்கி போயுள்ளது. 16 சுரங்கப்பாதைகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து 6,110 கன அடியாக உள்ளது. ஏரியில் நீர்மட்டம் 24 அடியில் 23.45 அடியாக உள்ளது. 2015ம் ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 23 அடியை தொட்டுள்ளது.