கண்டிப்பா முகக் கவசம் அணியனும்; காய்ச்சல் பாதிப்பு தீவிரம் - மக்களே கவனம்!
முகக் கவசம் அணிய மக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தொடர் மழை
தொடர்ந்து மழை பெய்து வருவதால் இதனால், மழைக்கால நோய்களாக, காய்ச்சல், சளி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல்வலி,
தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், அவற்றை அலட்சியப்படுத்தாமல், மருத்துமவனையில் சிகிச்சை பெற வேண்டும்.
முகக் கவசம் அணியாததால் ஆத்திரம் - கறி கடை ஊழியரை பூட்ஸ் காலால் எட்டி மிதித்து சித்ரவதை செய்த காவலர்!
காய்ச்சல் தீவிரம்
குறிப்பாக 'ப்ளூ' வைரஸ்களால் பரவும், 'இன்ப்ளூயன்ஸா' காய்ச்சல், நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியது. மிதமான பாதிப்புகள் இருந்தால், 'ஆன்ட்டி வைரல்' மருந்துகளோ, மருத்துவ பரிசோதனைகளோ தேவையில்லை. அவர்கள் தனிமையில் ஓய்வெடுத்தல் போதுமானது.
மூச்சு திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதய துடிப்பு, வலிப்பு, சிறுநீர் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோர் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவத் துறையினர், சுகாதார கள பணியாளர்கள் முக கவசம் அணிதல் கட்டாயம்.
பொது இடங்களுக்கு செல்லும் மக்களும் முக கவசம் அணிவது அவசியம் என அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.