முகக் கவசம் அணியாததால் ஆத்திரம் - கறி கடை ஊழியரை பூட்ஸ் காலால் எட்டி மிதித்து சித்ரவதை செய்த காவலர்!
முகக் கவசம் அணியாததால் கறி கடை ஊழியரை பூட்ஸ் காலால் எட்டி மிதித்து சித்திரவதை செய்த போலீசாரின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் நேதாஜி நகரில் உள்ள கோழிக் கறி கடைக்கு, உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோவும், அவருடன் காவலர்களும் சென்றுள்ளனர். அப்போது, அங்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
திடீரென அங்கிருந்த கடை ஊழியரின் காலை பூட்ஸ் காலால் எட்டி மிதித்து அடித்து உதைத்து சித்திரவதை செய்தார் ஜான் போஸ்கோ. கறி கடை ஊழியரின் கால் மேல் ஏறி நின்று தாக்கியும், பூட்ஸ் காலால் உதைத்தும் சித்ரவதை செய்து துன்புறுத்தினர்.
தற்போது, இது குறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
போலீசாரின் இந்த அராஜக செயலுக்கு அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து போஸ்கோ, அந்த கறி கடை ஊழியர் முகக் கவசம் அணியவில்லை. இதனால், நாங்கள் நடவடிக்கை எடுத்தோம் என்று விளக்கம் அளித்தாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.