முகக் கவசம் அணிய வேண்டியது அவசியம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்..!
கொரோனாவை தடுக்க முகக் கவசம் அணிய வேண்டியது அவசியம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற நடைமுறை திரும்பப் பெறப்படவில்லை என்றார்.
முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆனால் அபராதம் இல்லை.அபராதம் விதிக்கப்படுவதில் இருந்து தான் விலக்கு.
முகக் கவசம் போடுவது என்பது ஒவ்வொருவரும் தன்னுடைய உயிரை காப்பாற்றி கொள்வதற்கு செய்கிற காரியம்.
அபராதம் விதித்து தான் தீர வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வரவே கூடாது. கட்டாயம் என வற்புறுத்தி உங்களை காவல்நிலையத்தில் கைது செய்வோம்,அபராதம் விதிப்போம் என்று சொன்னதற்கு பிறகு தான் என்னுடைய உயிரை காப்பாற்றி கொள்ள முயற்சிப்பேன் என்பது தவறு.
அவர் அவர்கள் தங்கள் உயிர் மீது அக்கறை இருந்தால்,ஆசை இருந்தால் முகக் கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும் என்பது தான் உலக நீதி எனவே முகக் கவசம் எல்லோரும் அணிந்து கொள்வது அவசியம்.
நாள் ஒன்றுக்கு இரண்டு முறை செய்தியாளர் சந்திப்பில் முகக் கவசம் அணிந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.
நாங்களும் மூச்சு முட்டினாலும் போட்டுக்கொண்டே தான் சட்டமன்றத்தில் அமர்ந்திருப்பதாக கூறினார்.