ஜீவசமாதி அடையும் ஒட்டுமொத்த கிராம மக்கள்? வெளியான அதிர்ச்சி சம்பவம்- பின்னணி என்ன?

India Puducherry
By Vidhya Senthil Sep 26, 2024 07:36 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 தாங்கள் வசிக்கும் பகுதிக்கு மனை பட்டா தராததைக் கண்டித்து அங்குள்ள மக்கள் பள்ளம் தோண்டி ஜீவசமாதி ஆகப்போவதாக நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வீராம்பட்டினம் சாலையில் செட்டி குளம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் ஏறத்தாழ சுமார் 18-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

ஜீவசமாதி

இந்த நிலையில், அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதனையடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இனி சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு விமானம் - டிக்கெட் விலை இவ்வளவுதானா?

இனி சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு விமானம் - டிக்கெட் விலை இவ்வளவுதானா?

இதுதொடர்பாக செட்டி குளம் பகுதியில் சாலையோரத்தில் வசிக்கும் இந்த மக்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அந்த மக்கள், சாலையோரத்தில் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்குப் பின்புறம் உள்ள இடத்தில் தங்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.

 ஜீவசமாதி 

ஆனால் இதுவரை அவர்களின் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் முதல்வர் மற்றும் அமைச்சர்களையும் சந்தித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

puducherry

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை செட்டி குளத்தில் தாங்கள் வசிக்கும் இடத்தில் 5 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டி அதில் ஆண்கள், பெண்கள் என பத்து பேர் உள்ளே இறங்கி ஜீவசமாதி ஆகப்போவதாக நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.