புதுச்சேரி சிறுமி பாலியல் படுகொலை; வழக்கில் கைதானவர்..சிறையில் தற்கொலை!

Sexual harassment Crime Puducherry
By Swetha Sep 16, 2024 03:17 AM GMT
Report

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைதானவர் தற்கொலை செய்துகொண்டார்.

சிறுமி படுகொலை

புதுச்சேரியில் 9 வயது சிறுமியை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான விவேகானந்தன் சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி சிறுமி பாலியல் படுகொலை; வழக்கில் கைதானவர்..சிறையில் தற்கொலை! | Puducherry Girl Murdered Case Accust Suicide

அதிகாலையில் கழிவறைக்கு சென்ற விவேகானந்தன் தூக்கிட்டு கொண்டதாக சிறைத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த விவேகானந்தன் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கைபுள்ளப்பா அது.. கை, காலை கட்டி; 9 வயது சிறுமி கொடூர கொலை - ரணமாக்கும் தந்தையின் ஆடியோ!

கைபுள்ளப்பா அது.. கை, காலை கட்டி; 9 வயது சிறுமி கொடூர கொலை - ரணமாக்கும் தந்தையின் ஆடியோ!

தற்கொலை

முன்னதாக, புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி சிறுமி பாலியல் படுகொலை; வழக்கில் கைதானவர்..சிறையில் தற்கொலை! | Puducherry Girl Murdered Case Accust Suicide

அந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.