Tuesday, Apr 29, 2025

கைபுள்ளப்பா அது.. கை, காலை கட்டி; 9 வயது சிறுமி கொடூர கொலை - ரணமாக்கும் தந்தையின் ஆடியோ!

Attempted Murder Sexual harassment Crime Puducherry
By Sumathi a year ago
Report

9 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

புதுச்சேரி, சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம்போல், தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார்.

puducherry

ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். அதன்பின் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதன்பின், போலீஸார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடினர்.

அப்போது, அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்ததில் அதில் காணாமல் போன சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்துள்ளார். உடனே, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

கூல்டிரிங்ஸ் கொடுத்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..அதிர்ச்சியான மருத்துவர்கள்!

கூல்டிரிங்ஸ் கொடுத்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..அதிர்ச்சியான மருத்துவர்கள்!

சிறுமி கொடூரக் கொலை

இதற்கிடையில், இச்சம்பவம் இணையத்தில் தீயாய் பரவி, ஏராளமான மக்கள் திரண்டனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி அந்தப் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்ததால், அங்கு போக்குவரத்து பாதித்தது.

கைபுள்ளப்பா அது.. கை, காலை கட்டி; 9 வயது சிறுமி கொடூர கொலை - ரணமாக்கும் தந்தையின் ஆடியோ! | 9 Year Girl Raped And Killed Puduchery

இந்நிலையில், சிறுமியின் தந்தை 'கஞ்சா குடிக்கிங்க 7 பேர் சேர்ந்து கை,கால்களை கட்டிப்போட்டு செஞ்சிருக்காங்கப்பா... கைபுள்ளப்பா அது' என பேசும் ஆடியோ வெளியாகி நெஞ்சை உலுக்கியுள்ளது. தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில், சிறுமியின் வீட்டின் அருகில் வசிக்கும் கருணாஸ், விவேகானந்தன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்ததில், விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை தனியாக வசிக்கும் விவேகானந்தன் வீட்டுக்கு கருணாஸ் அழைத்துச் சென்றுள்ளார். காலை 11 மணிக்கு சிறுமியை அழைத்துச் சென்றவர்கள், அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்யும் முயற்சியில் சிறுமி உயிரிழந்ததை அடுத்து கை, கால்களை கட்டி சாக்கு பையில் போட்டு கால்வாயில் வீசியுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.