இனி சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு விமானம் - டிக்கெட் விலை இவ்வளவுதானா?
இனி சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு விமானத்தில் செல்லலாம்.
சென்னை - புதுச்சேரி
புதுச்சேரியில் இருந்து பெங்களூருவிற்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது புதிதாக புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் பிற நகரங்களுக்கு விமான சேவை துவங்கப்படவுள்ளது.
அதன்படி, ஏர் சஃபா எனப்படும் விமான நிறுவனம் புதுச்சேரி-சென்னை இடையே 19 பயணிகள் பயணிக்கும் வகையில் அக்டோபர் மாதம் முதல் விமான சேவையை இயக்கப்படவுள்ளது.
விமான சேவை
இரு நகரங்களுக்கும் இடையே தினமும் ஐந்து முறை இந்த விமான சேவை செயல்படுத்தப்படும். விமான கட்டணமாக ரூ.1500 க்கும் குறைவான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு இயக்கப்படவிருந்த இண்டிகோ விமான சேவை நிர்வாக காரணங்களுக்காக அக்டோபர் மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.