ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் ஏற்கத்தக்கது அல்ல - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் காட்டம்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சட்டப்பேரவையில் செய்த செயல் ஏற்கத்தக்கது அல்ல என்று ஒளிப்பதிவாளருமான பி.சி.ஸ்ரீராம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வெளியேறிய ஆளுநர்
தமிழ்நாடு அரசின் இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையானது ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிராகரிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லை என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
மேலும், ஆளுநர் உரையில் தகவல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை வாசிப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அமையும் என்று கூறிவிட்டு, வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் என கூறி அவர் உரையை படிக்காமல் அமர்ந்தார்.
ஏற்கத்தக்கது அல்ல
அதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார். இருப்பினும், தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.
இந்த விவாகாரம் தொடர்பாக இந்திய சினிமாவில் இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் வலம் வரும் பி.சி.ஸ்ரீராம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் ஏற்கத்தக்கது அல்ல. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள். இந்த பதிவிற்காக என்னை மன்னித்து விடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
#RNRavi
— pcsreeramISC (@pcsreeram) February 12, 2024
Sorry sir your behavior is not acceptable.
Why do Governors in non Bjp ruled states behave like spoilt brats.