இனி மெரினா கடற்கரை செல்ல கட்டணம்? சென்னை மாநகராட்சி

Chennai
By Sumathi Apr 16, 2025 03:31 AM GMT
Report

மெரினா கடற்கரை செல்ல கட்டணம் தொடர்பான தகவலுக்கு சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரையில் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பல ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம்.

marina beach

தற்போது வரை இங்கு வருவதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள ஒரு சிறிய பகுதிக்கு,

தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மாநகராட்சி விளக்கம்

பொதுமக்கள் இனி கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற புதிய விதி விரைவில் அமலாக உள்ளது என்ற செய்தி இணையத்தில் பரவி வந்தது.

இனி மெரினா கடற்கரை செல்ல கட்டணம்? சென்னை மாநகராட்சி | Pay To Go Marina Beach Chennai

தொடர்ந்து இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தற்போது நீல கொடி கடற்கரை திட்டம் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.

பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் விளக்கமளித்துள்ளார்.