தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயில்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது.
குறிப்பாக மதுரை,வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரு வாரத்திற்கு மழை
இது குறித்து சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை, தமிழகம் முழுவதும் லேசான முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப நிலை
அதேவேளையில், இன்று மற்றும் நாளை தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
ஏப்ரல் 17 முதல் 19 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
